இனி (ய) தமிழ் மொழியே...! - 11
சிட்டுக்குருவியாய் பறக்கும் மனதும்!
பட்டுக்குயிலாய் பாடிடும் குரலும்!
சுட்டும் எரிதழல் பார்வை உனக்கும் !
தீஞ்சுவை தமிழொடு தந்திடும் தமிழை!
இனியும்இனியும் உடைக்காதே!-
உனக்கு விடியும்பொழுதும் விடியாதே!
அன்பும்அறிவும் ஆற்றலும் வெற்றியும்!
அன்னையாய் தந்து அணைக்கும் தமிழை!
பண்பும் பணிவும் பன்முகப்பொழிவும்
உன்னில்தங்கிடச்செய்யும் தமிழை!
இனியும்இனியும்உடைக்காதே -
உனக்கு விடியும்பொழுது ம்விடியாதே!
சான்றோர் சபைதனில் அனலாய் பேச்சும்!
பாவலர் மன்றத்தில் பதமாய் பாட்டூம்!
குறமகள் காவலன் முருகனின் அன்பை!
ஈகையாய் தந்து சிரிக்கும் தமிழை!
இனியும்இனியும் உடைக்காதே-
உனக்கு விடியும் பொழுதும் விடியாதே!
உனக்குள உணர்வை ஊட்டும் தமிழை!
உன்னையாரெனக்காட்டும் தமிழை!
மண்ணை மணம் பெறச்செய்யும் தமிழை!
மன்னவனாய் உனை உயரத்திடும் தமிழை!
இனியும் இனியும் உடைக்காதே-
உனக்கு விடியும் பொழுதும் விடியாதே!
வாழ்க தமிழ் !வெல்க தமிழ்!
- அ. பாண்டுரங்கன், மதுரை.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.