இனி (ய) தமிழ் மொழியே...! - 14
ஒரு நாடே தமிழுக்கு அடிமையானது அது தமிழ்நாடே
தாய்மொழியேத் தன் பெயராகக் கொண்ட தமிழ்நாடே
ஊரிலுள்ள அனைவருக்கும் ஒரே தாயாய் இருக்கும் மொழி
அது என் தமிழ் மொழியே
ஆங்கில வழியில் கல்வியில் செல்லாமல்
தமிழ் வழிக் கல்வியில் பயின்றிடு
தமிழை உன் தாயாக நினைத்திடு
தமிழ் மொழியின் எழுத்துகளில்தான்
உன் வாழ்க்கை தொடங்குகிறது
அம்மா, அப்பா என்றே உயிரெழுத்தின் முதலெழுத்து
உயிர்மெய்யெழுத்தின் முதல் எழுத்து 'க'
கருவறையில் தான் நீயே உருவாகிறாய்
உலகின் முதல் மொழியாம் தமிழ் மொழியே
என்றும் நீ தரம் குறைய மாட்டாய்...
- செ. தங்கராஜ வர்சினி, பெரியகுளம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.