இனி (ய) தமிழ் மொழியே...! - 15
நான் பிறந்தபோது
சமஸ்கிருதம் இல்லை...
நான் தவழ்ந்தபோது லத்தீன் இல்லை...
நான் வளர்ந்தபோது ஆங்கிலம் இல்லை...
சுருங்கக்கூறின் என்னிடம்
ஆதியும் இல்லை
அந்தமும் இல்லை...
நான் ஆதிக்கும் மூத்தவள்...
அந்தத்திலும் தொடர்பவள்...
இப்பொழுது தெரிந்திருக்கும்
இயற்கையை விட மூத்தவள் நானென்று...
நான் எழுத்தை உருவாக்கினேன்...
நான் ஓசையை உருவாக்கினேன்...
நான் வார்த்தையை உருவாக்கினேன்...
இனிய உளவான வார்த்தைகள் அவை...
இப்போது புரிந்திருக்கும்
தேனைவிட இனியவள் நானென்று...
தொல்காப்பியனையும் வள்ளுவனையும்
இளங்கோவையும் ஈன்றெடுத்தவள் நான்...
வரலாற்றையும் அதன் வழியேப்
பண்பாட்டையும் வடித்தெடுத்தவள் நான்...
என் பின்னே பிறந்த
பிற மொழிகள் இன்று இங்கில்லை...
அம்மொழிகளை நீங்கள் வாசிசித்தீர்கள்...
என்னையோ நேசித்தீர்கள்...
உயிராய் சுவாசித்தீர்கள்...
நான் வாழ்கிறேன்...
வாழ்ந்து கொண்டே இருக்கிறேன்...
வாழ்ந்து கொண்டே இருப்பேன்...
இன்று மட்டுமல்ல...
என்றுமே தரணியை ஆள்பவள் நானே...
இனியெல்லாம் என் அரசாட்சியே..!
- இப்படிக்கு,
தமிழ்.
- ரா. சுரேஷ் பவானி
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.