இனி (ய) தமிழ் மொழியே...! - 19
அன்னைத் தாலாட்டிலிருந்து
அழகாய் மிளிர்ந்து மெருகேற்றி
என்னை வளர்த்த இன்பத் தமிழ்...
தமிழின் சிறப்பெழுத்தே
ழகரமும் தேன் மதுர
இயல் இசை நாடகமென
இனிய தமிழ்...
அகத்தியரால் வளர்க்கப்பட்ட
தமிழ்...
அவ்வையால்
ஆத்திச்சூடி இயற்றிய தமிழ்...
வள்ளுவனும் இரண்டடியால்
உலகினிற்கு
குறளமைத்த தமிழ்...
தாத்தனும் பூட்டனும் தமிழ்ப்
பாலால் வளர்ந்து தரணிதனில்
தமிழ் வளர்த்தனரே...
எண்ணிலடங்கா வரலாற்றுப் பெருமைகளை
முரசு கொட்டாமலே பறைச் சாற்றி
புரவலர்களால் வளர்ந்த தேன் தமிழே...
எண்ணிலடங்கா பெருமையைச் சுமந்த
சுகமான தமிழே...
எண்ணமும் செயலும் மூச்சில் வாசத்தில்
சுவாசமான தமிழ்...
என்னை வளர்த்த
ஏணித் தமிழ்...
உலகத்தை ஆளும்
தீந்தமிழ்... கன்னித் தமிழே...
இதயத்தின் நாதமும் தமிழே
எட்டுதிக்கும் முரசு கொட்டும்
அழகிய இனி (ய) தமிழ் மொழியே...
வாழியவே...!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.