இனி (ய) தமிழ் மொழியே...! - 20
கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே தோன்றிய
உலகத்தின் முதல்மொழி
தாய்மொழியாம்
எங்கள் தமிழ்மொழி!!
உலகப்பொதுமறையாம்
திருக்குறள்
உதித்த மொழி
எங்கள் தமிழ்மொழி!!
ஒருவனுக்கு ஒருத்தி
என்ற இல்லற
மாண்பை உணர்த்திய
கம்பராமாயணம் தோன்றிய மொழி
எங்கள் தமிழ்மொழி!!
குடிமக்களை முதன்மைப்படுத்தி
காப்பியம் படைத்த புதுமைமொழி
எங்கள் தமிழ்மொழி!!
யாம் கற்ற மொழிகளிலே
தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம் என்று
பாரதி பாடிய பெருமை மிகு மொழி
எங்கள் தமிழ்மொழி!!
முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த
பெருமைமிகு மொழி
எங்கள் தமிழ்மொழி!!
சிவபெருமானின் உடுக்கையிலிருந்து
தோன்றிய மொழி
எங்கள் தமிழ்மொழி!!
தேம்பாவணியும்
சீறாப்புராணமும்
படைத்து எம்மதத்திற்கும்
சம்மதமாய் இருப்பதும்
எங்கள் தமிழ்மொழியே!!
- ரா. சந்திரசேகரன், வடுகபட்டி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.