இனி (ய) தமிழ் மொழியே...! - 21
வாழ்வியல் நெறிமுறையில் இலக்கணம்
அறிவியல் புரட்சியில் நாசாவின் நாற்பது சதவீதம்
இந்திய இஸ்ரோவின் இதயமென இருந்து
கொரானாவுக்கே சவால்விடும் மருத்துவமாய்
ஆக்கத்தையும் அழிவையும் அழகாய் நேர்நிறுத்தும்
நீ கடவுளின் மொழி...!
உயிர்பெறும் மொழிகளுள் உயிர்தரும் மொழியாய்
நெடுஞ்சாலை பெயர்ப்பலகை தொட்டு - அயல்நாட்டு
ஆட்சி கதவு வரை துளைத்து உள்ளூரில் ஓடும்
வாகன எண் பலகையில் தமிழாய் நின்று
இந்திய பட்ஜெட்டின் முன்னுரையும் அதன்
முடிவுரையும் நீயாய் இருக்கிறாய்...!
ஆயிரம் காலத்து அசாத்திய அதிசயம்
அதன்மேல் கடவுளும் அந்தச் சோழனும்
உன்னை முன்னிறுத்தியேக் குடமுழுக்கு செய்தார்கள்
புதுமைக்கும் அதன் புரட்சிக்கும் ஏங்கும்
இளமை ரத்தங்கள் உம்மை நினைத்துத்தான்
உறங்கி எழுகிறது தினமும்...!
அலைபேசியில் விசைப்பலகை அது தரும் தகவல்களாய்
உம்முடைய இலக்கணத்தைக் கற்றுதான் சுற்றுகிறது
கூகுளும் இணையத்தில் இன்று...!
அகமாய் புறமாய் அழகாய் வாழ்வை நேர்செய்து
எங்களை வழிநடத்தி வாழ்விக்கும்
இனிய தமிழே...! இனி எங்கும் தமிழே...!
- க. சரவணன், ஜெயமங்கலம், தேனி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.