இனி (ய) தமிழ் மொழியே...! - 22
கடவுளின் பேரொளியாய் விளங்குபவன் நீ
காலம் பல கடந்தும்...
கட்டுமரமாய் மிதப்பவள் நீ!
கயவர்களின் சூழ்ச்சியாலும் அழியாதவள் நீ!
கனத்த பொருள் கொண்டவள் நீ!
களத்திலிறங்கும் காளை போன்றவள் நீ!
எதிர்த்தவர் உன் முன் தோற்றும்
எதிர்க்க இயலார் மண்டியிட்டும்
உன்னை வணங்கிச் செல்லும்
கலைக்கோயில் நீ!
முட்டுக்கட்டை இடுவோரை
முற்றும் கையகப்படுத்திச் செல்பவள் நீ!
எம்மினத்தின் தாயும் நீ
எண்ணிய எழுத்துகளும்
எண்ணிலடங்கா பெருமைகளும்
தன்மையான சொற்களோடு
தகுதியான பெயர் பெற்ற தமிழே!
என் அமுதே! என் உணர்வே!
உந்தன் நெடுங்காலப் பயணத்தில்
நெடுந்தூரம் பயணிக்க இயலாமல்
போனாலும்...
என் பிறவிப் பலனை
என்றும் உணர்வேன் உன்னால்...!
தமிழினத்தில் நானும் ஒரு
அங்கம் என்று அறிவதில்
உன் முடிவில்லாப் பயணத்தில்
நானும்... மிக்கப் பெருமிதம்!
என்றும் தமிழன்னையின் மகளாய்
இருப்பதில்... மிக்கப் பெருமிதம்!
- கௌசல்யா மாணிக்கம், சேலம்..

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.