இனி (ய) தமிழ் மொழியே...! - 24
தரணியிலே மூத்தமொழி என்
தமிழ் நாடு காத்த மொழி
என் இனிய தமிழ் மொழியே!
தவழும் பருவத்தில்
தாலாட்டு பாடியமொழி
என் இனிய தமிழ் மொழியே!
முத்து குளித்தவனும்
முதலில் பேசிய மொழி
என் இனிய தமிழ் மொழியே!
உயிர் கொடுத்த தாயை
அம்மா என்று சேய் அழைத்ததும்
என் இனிய தமிழ் மொழியே!
வள்ளுவனின் குறளாய்
வாழ்ந்து கொண்டிருக்கும்
என் இனிய தமிழ் மொழியே!
வரலாறு படைத்த பாரதியின்
வரிகளைத் தன்னகத்தே வைத்திருக்கும்
என் இனிய தமிழ் மொழியே!
முச்சங்கம் வைத்து
முத்தமிழ் வளர்த்த மொழி
என் இனிய தமிழ் மொழியே!
ஓரெழுத்தில் பொருள் தந்து
வியப்பில் ஆழ்த்தும்
என் இனிய தமிழ் மொழியே!
என்றென்றும் நீ வாழியவே...!
- சே. காஜாமைதீன், பெரியகுளம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.