இனி (ய) தமிழ் மொழியே...! - 25
புத்தமுதாய்இலங்குதொன்மைதமிழைப்போல
பூமிதனில்வேறெந்தமொழிதாம்உண்டோ
முத்தமிழின்பிரிவைப்போல்உலகந்தன்னில்
முகிழ்ந்துள்ளமொழிகளிலேவகையுமுண்டோ
நித்திலமாய்ஐந்துவகைஇலக்கணத்தை
நீள்புவியில்பெற்றவேறுமொழிதாம்உண்டோ
எத்தனையோமொழிகளினைத்திணித்தபோதும்
எழில்மாறாத்தனித்தமிழ்போல்வேறிங்குண்டோ !
அகத்திற்கும்புறத்திற்கும்நெறிகள்சொல்லும்
அருந்தமிழைப்போலெந்தமொழியிலுண்டு
தகவுடையதிருக்குறள்போல்வாழ்வைக்காட்டும்
தனிநூல்கள்வேறெந்தமொழியிலுண்டு
நகமகுடவிரல்கள்போல்காப்பியங்கள்
நல்லெட்டுபத்துதொகைஎங்கேஉண்டு
முகத்திற்குமுன்நிற்கும்மூக்கைப்போல
முன்பிறந்ததமிழ்க்கிணையாய்ப்பிறிதெங்குண்டு !
ஆழ்வார்கள்நாயன்மார்சமணர்யாத்த
அரும்பாக்கள்கொண்டமொழி ;இறைவன்போற்றி
வாழ்வித்தபக்திமொழி ; கணினிக்கேற்ற
வளமுடையமொழியென்றேஉலகம்ஏற்று
வாழ்த்துமறிவியல்மொழியாம் ;சித்தர்தந்த
வளமருந்துஞானமொழிஎல்லாம்பெற்று
வாழ்கின்றஇளமைமொழிதரணிஆள
வளர்தமிழுக்கிணைமொழிதாம்உண்டோசொல்வீர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.