இனி (ய) தமிழ் மொழியே...! - 28
தேனினும் இனிய செந்தமிழ் மொழியே
வானினும் உயர்ந்த பைந்தமிழ் மொழியே
செம்மொழி பெருமை வாய்ந்த நம்மொழியே
உம்பெருமை உலகிற்கு சொல்லிட வந்தோம்
கம்பநாடான் தந்த கம்பராமாயணமும்
இளங்க்கோ செய்த சிலம்புகாவியமும்
வள்ளுவனார் தந்த உலகப்
பொதுமறையும்
தொல்காப்பியனார் செய்த இலக்கண நூலும்
அகத்தியர் வளர்த்த அருந்தமிழ் மொழி நீ
பொதிகை மலையில் பிறந்தவள் நீ
பொதுவெளி தனிலே பேசும் மொழி நீ
முதுமொழி முத்தமிழ் முதல்வியும் நீ
ஆழ்வார் வளர்த்தெடுத்த பிரபந்தமும் நீ
நாயன் மார் செய்த பக்கி தமிழும் நீ
சமனர்கள் தந்த அறத்தமிழ் நீ
சங்கம் வளர்க்க காரணமானவள் நீ
பாரதி கண்ட புதுமை தமிழ் நீ
குமரிமுதல் இமயம் வரை பரவிய மொழி நீ
எட்டு திக்கும் எட்டாத உயரம் எடிய மொழி நீ
சரித்திரம் படைத்த சகாப்பத்தம் நீ
முச்சங்கம் வளர்த்த மதுரமொழி நீ
இச்செகமெல்லாம் கொண்டாடும் மொழி நீ
கிருத்துவமும் இஸலாத்தும் வளர உதவியமொழி நீ
உயிரையும் உள்ளத்தையும் இணைத்த மொழி நீ
நீ வாழ்க வாழ்க பன்னெடுங்காலமாய்
நீ வளர வளர தமிழ்உலகம்
வளரும் இவ்வுலகினிலே...
- ப. ஆனந்தன், திண்டுக்கல்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.