இனி (ய) தமிழ் மொழியே...! - 3
கீழடிப் பானையோட்டில்
கிறுக்கலாய் தமிழ்
பாறைச் சுவர்களிலும்
பரவி அறுபதாயிரம்
கல்வெட்டாக,
ஆயிரம் செப்பேடுகளாக
பல்லாயிரம் பனையோலைகளாக
நின்றதும் தமிழ்
நான்கு - ஐந்து நூற்றாண்டில்
பாண்டி நாட்டில்
வட்டெழுத்தாக
சோழ நாட்டில் தமிழாக
சோபித்தும் நின்றதும் தமிழ்
கலைக்கோயில்
பல்லவர் கோன்
காலத்தே
அழகுத் தொங்கலுடன்
கிரந்த எழுத்தாகி
இராஜராஜன் காலத்தே
எங்கும் ஓர் எழுத்தாகி
கடல் கடந்தும்
கல்லெழுத்தாகி
ஈராசு எல்லீசு
போப் துரைகளை
ஈர்த்து
கணிப்பொறி காலத்தே
கனிந்த எழுத்தாகி நின்ற
இனி (ய) தமிழ் மொழியே...!
- ந. சுந்தராஜன், காப்பாட்சியர், அருங்காட்சியகம், சென்னை.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.