இனி (ய) தமிழ் மொழியே...! - 7
பழமைக்கு பெயர் போன தமிழே - இனிக்கும்
பழமாக நிலைப்பதுவும் உம் அழகே.
உலகினில் தமிழன் கொண்ட நல்மனம்
உயர்ந்தே வெளிக்காட்டும் உன் நறுமணம்.
சென்ற திசையெல்லாம் தமிழனுக்கு சிறப்பு
செப்பிய யாவும் உம்மால் கிடைத்த நல்வரவேற்பு.
பாராளுமன்றமும் பறைசாற்றுது உம் புகழை
பாராமுகம் கொண்டால் அடைவர் இகழை.
அகழ்வாராய்ச்சி செய்திடினும் அங்கும் உம்தடமே
ஆய்ந்து நோக்கிட்டால் எங்கும் நிறைகுடமே.
காப்பியங்களை அள்ளித்தந்த உம் இலக்கு
காலத்தின் என்றென்றும் அணையா விளக்கு.
தமிழனுக்கு உம்மால் என்றும் செருக்கு
படைப்புகள் சொல்லும் உணர்ச்சிக் பெருக்கு.
மலையாளம், தெலுங்கு கன்னடம் உம் சகோதரிகள்
உச்சரிப்பில் வெளிக்காட்டும் யாவும் உம் மாதிரிகள்
வேற்று மொழியாரைக் கவர்ந்திழுக்கும் உம் திறம்
வேறெங்கும் கண்டதில்லை உம் திடம்.
விண்ணுக்குச் சென்றும் வித்திடுவான்- தமிழன்
வீர மண்ணுக்குள் சென்றாலும் முத்திடுவான்.
தமிழ் நடனமாடிய மானிட நாவை
தரணியில் போட்டியிட்டு விரும்புவாள் பாவை
உனை உச்சரித்தே தமிழன் தொட்டன் உச்சத்தை
உனை விடுத்து அவனால் சாதிக்க இயலாது எச்சத்தை.
- இரா. மேகலா, பச்சூர், காரைக்கால்..
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.