இனி (ய) தமிழ் மொழியே...! - 9
அன்பைத் தரும் அன்னை மொழி
ஆற்றலை வெளிப்படுத்தும் அமுதமொழி
இனிமையான கன்னல் இனியதமிழ் மொழி
அகரம் தொடங்கி னகரம் முடித்து
அதிர வைத்த மொழி
அகிலமெல்லாம் அனைவரும் ஏற்ற மொழி
தொல்லுலகம் போற்றிய தொன்மை மொழி.
தோன்றின் புகழோடு தோன்றி
உலகம் போற்றிய உன்னத மொழி
தமிழின் பெருமை தரணி போற்றும்
தன்னிகரில்லா திறன்படைத்தது.
எதிர்க்கத்துணிவின்றி பல மொழிகள்
எங்கோ மறைந்தன.
தமிழ் மொழியே அனைவரின்
மனத்தில் நிறைந்தது.
தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை
காலங்களின் போக்கில் கலங்கரைவிளக்காய்
கன்னித்தமிழ்மொழி
ஆய்வுகள் கூற்றில் உலகம் ஏற்றது.
தமிழ் மொழியே முதன்மொழி என்று
கீழடி ஆய்வில் முடிவு
தொன்மையானது தமிழே!
இம்மொழி எங்கும் பரவி இனிய மொழியாய்
வலம்வரும்
"இனி (ய) தமிழ் மொழியே!"
- முனைவர் த. மாயக் கிருட்டிணன், பெரம்பலூர்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.