அன்றும் இன்றும் - 16
தாய்மொழியில் பேசும் பெருமை
தமிழனுக்கு அன்று
சபைதனிலே பிறமொழி பெருமிதம்
ஊறுது இரத்தத்தில் இன்று
குழந்தைக்குப் பாட்டியின் கதை
வினோதம் அன்று
விதவிதமாய் வீடியோ கேமில்
தொலைந்தது இன்று
வீட்டிற்கொரு கழனி நிலம் அன்று
நிலமே வீடாய் மாறியது இன்று
மாலை வந்துவிட்டால் தலைவன்
வரவை நோக்கி அன்று
பெற்றோர் வரவிற்காக
வாசற்படியில் குழந்தைகள் இன்று
ஆலமரத்து விழுது போல்
கூட்டுக் குடும்பம் அன்று
சிங்கத்திற்கான தனிக் குகை போல்
தனிக்குடும்பம் இன்று
காதலிக்கு காதல் மொழியில்
ஒத்த ரோசா அன்று
ஆண்ட்ராய்டு போன் ரோசாவாய்
மாறியது இன்று
கடல் கடந்து செல்லும்வழக்கம்
பெண்ணிற்கு இல்லை அன்று
இவையெல்லாம் மாறிப்போச்சு இன்று
என்னதான் மாறினாலும்
பல விசப்பூச்சிகள் சுதந்திரத்தை
உறிஞ்சிக்கொண்டே இருக்கிறது இன்று
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது அன்று
நரகாசுரனைப் போல் நாசம் பண்ணும்
எமன்கள் உலவும் உலகம் இன்று
சித்த மருத்துவம் ஒன்றே
தமிழர்களின் தாய்மடி அன்று
தொலைந்து போனது உயிர்மடி இன்று
அன்றும் இன்றும்
அக்கரைக்கு இக்கரைப் பச்சை
என்றும்...
- த. சித்ரா, ஈச்சம்பூண்டி, கடலூர் மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.