அன்றும் இன்றும் - 19
அரண்மனை அது வாயில்லடா
அதில் வசிக்கும் மனிதன் அரசனடா
குடிசை அது கோவிலடா
அதில் வாழும் கடவுள் மனிதனடா
ஆத்தங்கரை பேச்சு
கூண்டோடு அழிந்து போச்சு
வாட்ஸ் அப் கடையில்
கடல போட்டாச்சு
திண்ணை பேச்சு
இன்றைய காலம் அதை தின்னுட்டு போச்சு
வலை பேச்சு இங்கு
வாடிக்கை ஆச்சு
அடுப்பங்கரை எல்லாம் உறங்க போயாச்சு
சில வீடுகளில் சிவப்பு சட்டை
கூட்டம் டோர் டெலிவிரி ஆச்சு
கூடும்பமா சிரிச்ச காலம் போயி
கூட்டமாக குருப் ஆரம்பிச்சாச்சு
வாட்டமாக வாழ்ந்த காலம் போயி
அறிவியல் வலு இலக்க வச்சாச்சு
வயல்வெளி எல்லாம் அதிசியம் ஆச்சு
விளைந்த நிலம் புகைப்படம் ஆச்சு
தாவிக் குதித்த குளிரக்கரை எங்கே
வாடகை முடிந்தவுடன் கிளம்பியதோ அது
நிரம்பி வழிந்த கிணறு எங்கே
நீதி கேட்டு கோட்டைக்கு போச்சோ
- ரா.சுதர்சன், உசிலம்பட்டி, மதுரை மாவட்டம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.