அன்றும் இன்றும் - 21
அன்று பொற்றாமரை குளத்திலோர் பூகம்பம்
ஆம்....ஆண்டவன் செதுக்கிய
அழகுத் தமிழ்ப் பாவில் ஓர் குற்றம் கண்டான்
தமிழ்ப் புலவன் நக்கீரன் எரிந்து சாம்பலானான்
பொற்றாமரை குளத்திலிருந்து உயிர்த்து
புதுப் பொலிவுடன் வந்தான் நக்கீரன்...
நின் தமிழ் புலமைக்கோர் சோதனை
எனக் கூறி அருளாசி சொல்லி மறைந்தான் இறைவன்
இது அன்று.... இன்றும்
பாட்டுக் கொரு புலவன் பாரதி பாடி வளர்த்த தமிழ்
அவர் அடியொற்றி பாரதிதாசன் தாலாட்டிய தமிழ்...
தமிழ் வாழுமிடமெல்லாம் சங்கங்கள்
சங்கங்கள் இருக்குமிடமெல்லாம் தமிழ்ச்செம்மல்கள்
செம்மல்கள் வாழுமிடமெல்லாம் சிறந்தோங்கும் தமிழ்
தமிழ் வளர்ந்தோங்குமிடம் தேடி தமிழ் சான்றோர்கள்
புலவர்கள் அறிஞர்கள் ஆன்றோர்கள் கூடுமிடம் தேடி
வளர்ந்த தமிழை வாழும் தமிழை
வரும் வழி நின்று வணங்கிட
தேனி தமிழ்சங்கம் கண்டு
வரவேற்பு பாட வந்தோம்
வளர்க தமிழ் வாழ்க தமிழ்...
- கவிஞர் பரணி ரமணி, மதுரை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.