வசந்த விடியல் - 11
வசந்த விடியலோ வாழும் நம் கையில்
நாளும் நகரும் நாட்களில் இல்லை
சட்டெனத் திரும்பிப் பார்க்கையில்
சட்டங்கள் எழுந்து நிற்கின்றன.
உரிமை உள்ளது, நீ படித்த, படிக்கும்
படிக்கப் போகும் ஏடுகளில் மட்டும்
வாழ்க்கை நடத்திப் பாருங்கள்
வரி எனும் ஒப்பந்தமிட்டு
முற்றிலும் உணர்ந்து பாருங்கள்
உங்கள் மூச்சுக் காற்றும்
இன்றைய சுற்றுச்சூழலால் கெட்டு...
நலமா என ஆராய்ந்து பாருங்கள்
நீங்கள் உணவு நஞ்சென்று...
நங்கையரை நசுக்கிப் போட்ட பூவாக
மாற்றிய நரனும் வாழும் இந்நாடு
நீ உழைத்துச் சம்பாதிக்கும் பணமும்
நாளை பயன்படுமோ எனும் நிலை...
இந்தப் பணத்தை நோக்கிய
பந்தயமன்று வசந்த விடியல்...
யாவரும் நல்லவர் போன்றேத் தோன்றினாலும்
தன்னலம் மிக்கோர் சூழ்ந்த உலகமிது
வசந்த விடியல் என்பது
தன்னலமில்லாது இருப்போரிடம் மட்டுமே...
- எ. கௌரி, கூடலூர், தேனி மாவட்டம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.