வசந்த விடியல் - 17
நடைபயணம் தேவையில்லை
பாதமின்றிப் பறக்கிறேன்
நாலு காசு தேவை இல்லை
பண மழையில் மிதக்கிறேன்
போட்ட துணி பல இருக்கு
போட்டுக்க புதுசு வாங்கவே
மாட்டச் சட்டம் குவிந்திருந்தும்
புதுசாய் மட்டும் தேடுவேன்
சட்டி நிறையச் சோறு
இருந்தாலும்...
உணவகமே காண்பேன்...
உண்ட மயக்கம் தீரச்
சிற்றுண்டியையே நாடுவேன்...
ஒரு பொழுதைக் கழிக்கவும்
உலகமெல்லாம் மறக்கவும்
மது போதையைத் தேடுவேன்
மது மயக்கத்தில் ஆடுவேன்...
இருக்கும் வரை வாழவே
இருப்பதையும் இழந்து
போராடுவேன்....
இப்படியாக...
வசந்த விடியலை நோக்கி
ஒரு பயணம் பார்த்தால்
வந்த வழி எல்லாம்
கனவாகிப் போச்சு...!
நினைவு தெளிந்து பார்த்தால்
நான் ஒரு பிச்சைக்காரன்
- ரா. சுதர்சன், உசிலம்பட்டி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.