வசந்த விடியல் - 2
பொய்த்த வானம்
பொழிய வேண்டும்...
பூமி நன்றே
செழிக்க வேண்டும்...
பஞ்சம் பசி
ஒழிய வேண்டும்...
மக்கள் மனம்
மகிழ வேண்டும்...
இயற்கை விவசாயம்
தழைக்க வேண்டும்...
நோயில்லா பெருவாழ்வு
நிலைக்க வேண்டும்...
அரசுப் பள்ளிகளைக்
காக்க வேண்டும்...
வர்த்தகப் பள்ளிகளை
நீக்க வேண்டும்...
மதுவின் ஆட்டம்
ஒழிய வேண்டும்...
மங்கையர் வாழ்க்கை
ஒளிர வேண்டும்...
போக்கு வரத்தில்
சுகம் வேண்டும்...
ஒரு நாள் ஒரு பொழுது
108க்கு ஓய்வு வேண்டும்...
வாக்கினை விலைபேசும்
போக்கு நீங்கவேண்டும்...
வளமான தேசமென்றே
உலகம் பேச வேண்டும்...
படிப்பின் பண்பின்
ஆட்சி வேண்டும்...
பல்லுயிர் களித்திடும்
காட்சி வேண்டும்...
லஞ்சமும் ஊழலும்
மறைய வேண்டும்...
நேர்மையும் நீதியும்
நிறைய வேண்டும்...
அன்னைத் தமிழுக்கு
அரியணை வேண்டும்...
ஆட்சி மொழியென்னும்
சரியணை வேண்டும்...
இவையாவும் ஒருங்கமைந்து
பூபாள ராகம் பாடி
புலரும் பொழுதெல்லாம்
வசந்த விடியலே...
வசந்த விடியலே...!
- கவிஞர் செ. திராவிடமணி, கூடலுார் - 625 518, தேனி மாவட்டம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.