வசந்த விடியல் - 20
இருள் திரை விலக்கி
சூரியப்பூ மலரும் பொழுது
வசந்த விடியல்
இந்த விடியலிலேயே
அனைத்தும் தொடக்கம்
அதிகாலைப் பறவைகளின்
கீச்சுக்குரல்கள்
வசந்த விடியலுக்கான
மங்கல இசை
பகலெல்லாம் மாசுபட்ட பூமி
இரவில் தன்னைப் புதுப்பித்து
மீண்டும் புதிய குழந்தையாய்
விடியலில் பிறக்கிறது
ஆகாய அழகை ரசிக்கவும்
வயல்வெளிகள் வாசம் உணரவும்
ஓடும் நதிகளின் ஓசை கேட்கவும்
இயற்கை அழகில் இணைந்திருக்கவும்
அழகிய பொழுதே வசந்த விடியல்
வானில் ஒளி தந்திடும்
வண்ணமயமான விடியல்
நம் வாழ்விற்கு நம்பிக்கையூட்டும்
வசந்த விடியலே...
- ம. செல்வதுரை, பழனிசெட்டிபட்டி, தேனி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.