வசந்த விடியல் - 22
நிறைசூலி தன்
முட்டையை கருவுக்கு
மாற்ற இரண்டு கைமுழி குழிகள்
தேவைப்பட
மகளுடன் பிறந்த
சூரியனின் ஞாபகமறதி
பால்ய குழந்தைமையை
தக்க வைக்கும்
முளைப்பற்ற விதையின்
நுனியில்
மெல்ல அரும்பும்
பருக்களின் சுண்டில் மலரும்
வெண்சிவப்பு மலர்கள்
கதிர்மறையின் காலத்தைப்
பிசைந்து
கொடுக்கிறது
தீடீரென்று வெளியான
வெய்யோனுக்கு
ஊர்கூட்டி
பச்சைத் தொட்டில் கட்டி
காதில் மூன்றுமுறை
மெல்லக் கூறினர்
வசந்த விடியல்
- சே. தண்டபாணி தென்றல், புளிக்காரன்காடு, கோபிசெட்டிபாளையம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.