வசந்த விடியல் - 23
ஒவ்வொரு நொடியும் வசந்தத்தின் விடியலே
நாம் விழித்துக் கொண்டேயிருந்தால்...
மண்ணிற்குக் கருமேகம் மூலம் விடியல்
மேகத்திற்கு மரம் மூலம் விடியல்
பெற்றோர்களைப் பேணிக் காக்கும் குழந்தையும்
பெற்றோரின் அரவணைப்பும் வசந்தத்தின் விடியலே...
சிறந்த மாணவர்களை உருவாக்கும்
ஆசிரியர்களின் சேவையும் வசந்த விடியலே...
சிக்கனமாய்க் குடும்பம் நடத்தும்
குடும்பத் தலைவியின் திறமையும் வசந்த விடியலே...
சான்றோரின் வாக்கு கேட்டு
சாதிக்கும் அனைத்தும் வசந்தத்தின் விடியலே...
நேர்மறை எண்ணங்களை நியாயமாய்க் கடைப்பிடித்து
வாழ்வதும் வசந்தத்தின் விடியலே...
இல்லையென்போருக்கு இயன்ற வரை
உதவுவதும் வசந்த விடியலே...
ஊன்றுகோல் இல்லாமல் வாழ்வதும்
வசந்தத்தின் விடியலே...
நாள்தோறும் நல்ல புத்தகங்களைத் தேடி
வாசிப்பது வசந்தத்தின் விடியலே...
காலம் தவறாமல் கடினமாய் உழைத்து
கடமையாற்றுவதும் வசந்தத்தின் விடியலே...
தொடர் பயிற்சி விடாமுயற்சி எனத் தேவையைத்
தேடுவதும் வசந்தத்தின் விடியலே...
எத்தனை சோதனை வந்தாலும், சாதனை செய்யும்
அத்தனையும் வசந்த விடியலே...
- அ. நசிபா, உத்தமபாளையம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.