வசந்த விடியல் - 27
நாளைய பொழுது விடியும்
என்று தானே
இன்றைய இரவு காத்திருக்கிறது
நாளும் வருவது
காலையின் விடியல்
வாழும் மனிதர்கள்
தேடுவது வசந்த விடியல்
உழைத்து பிழைக்கும் மனிதருக்கு
எல்லாம் உண்டு
இங்கே வசந்த விடியல்
சோதனைகளை நீ உடைத்து
வேதனைகளைத் துடைத்து
சாதனைகளைப் படைக்கும் போதுதான்
அந்த விடியல்கள்
உன்னை விரும்ப ஆரம்பிக்கிறது.
உழைக்காமல் உறங்கிக்
கிடப்பவர்களுக்கு உறவு
இல்லையே வசந்த விடியல்
முயற்சி செய்யும்போதுதான்
மண்ணிற்குள் புதைக்கப்பட்ட விதை
பூமியைப் பிளந்து கொண்டு வந்து
விடியலை விரும்பி பார்க்கிறது
முடியும் என்று
முயற்சி செய்யும்போதுதான்
விடியும் பொழுதுகள் நமதாகும்
பறவைகள் விரும்புவது
காலையில் விடியல்
மனிதர்கள் விரும்புவது
வாழ்க்கையின் விடியல்
வாழும் உயிர்களையெல்லாம்
வாழ்த்தி மகிழும்
நம்பிக்கையோடு முயற்சி செய்தால்
நாளைய விடியல் நமது ஆகும்
வசந்த விடியலும் நம் வசமாகும்.
- கவிஞர் சு. பாலகிருஷ்ணன், மதுரை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.