வசந்த விடியல் - 28
வானம் பார்த்து வறண்டு போன
உலக மக்கள் நல்லாட்சி
காண ஏங்கி, ஏமாந்து வறுமை வேலையின்மை
மனதை வாட்டும் புரட்டு ஊழல்
நேர்மையாய் உழைத்தும், பற்றா நிலையால்
மனதில் வேதனையும் வெறுப்பும் மிகுந்து
மனித நேயம் வற்றிப் போக
குனம் மாறி சினமும் சிறுமையும் மேலோங்கி
அல்லல் படும் நிலை போக்கிட,
வனப்பும், பசுமையும், வாய்மையும், மனிதமும்
நல்கிடும் பொற்கால விடியலே வா!
தரணி எங்கும் தனியொரு மனிதனும்
குறையே இல்லா, நிறைந்து வாழும்
மரபினை நிலை நிறுத்தி மனிதம்
ஓங்கி மதங்கள் நீங்கி மனிதமே
வரலாறாய் புனிதமாய் மாறி அன்பும்
அறமும் பெருக்கெடுக்க விடியலே வா
சாதிபேதம் வேரோ டொழிந்து சமத்துவம்
எங்கும் எதிலும் நிலவிட எதுவும்
நீதியாய் பொது வென்றாகி எல்லார்க்கும்
எல்லாமுமான இனிய நல் விடியலே வா!
- பாராள்வோன், பெங்களூரு.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.