வசந்த விடியல் - 34

கடலில் விளைந்த சூரிய பழம்கண்களால் பசியைப் போக்கிடும்
கருப்புப் போர்வை மடித்து வானம் கருக்கலில் உழைக்க அழைத்திடும்
வெள்ளி முளைத்தால் சனி தொலைந்து விடும் இது வினோத விளையாட்டு
வசந்த விடியலை வரவேற்று மகிழ்ந்துவானில் கேட்டது பறவையின் ஒரு பாட்டு
கிளைகளில் இலைகளும் சோம்பல் முறிக்கும் விடிகாலை ஜோடி குயில்கள்
அங்கே கூடி திரிந்து பாடிக் களிக்கும் அதிகாலை
சேற்று வயல்களில் நாற்றும்வெட்கப்பட்டு சினுங்கும் வெள்ளன வேளை
சில்வண்டுபார்த்து சிரித்துக் குலுங்கும் மசங்கல் பொழுது
ஆற்றுமடைகளில் வாத்து படைகள்உல்லாச நடனம் பயிலும்
தென்றல் காற்று இடையே வந்து அந்த நாணல் புற்களைச் சீண்டிப் பார்க்கும்
கொக்கொக்என்பதால்கொக்கு காகா என்பதால் காக்கா கீச்கீச் என்பதால் கிளி சப்தங்களில்
சந்தங்களில் பாடி வரும் பறவை இனங்களால்இனிபாக்குது இளங்காலை
உலகிற்கே சோறு ஊட்டிவிட உழைப்பிற்கான ஏர்பூட்டினான்அந்த உழவன் நம் உறவன்
கதிர் வெடிக்க நலம் செழிக்க வளம்கொழிக்கவந்தது வசந்தத்தின் விடியல்இயற்கை அன்னையின்
மடியில்நம் சோகம் எல்லாம் பொடிப்பொடி ஆகிவிடும் ஒரு நொடியில்
மலை தாய் தன் தோளின் மீது தாலாட்டும் அருவி குழந்தைஅழுகையோடு நழுவி வரும்
உதிக்கும் ஆதவனின் அனுக்கிரகம் நம் உள்ளத்தில் பொங்கும் ஆனந்தத்தின் பிறப்பிடம்
ஓடும் மேகங்களில் ஒழியட்டும் சோகங்கள் இனிவரும் காலத்தில் பாடட்டும் புதிய ராகங்கள்
வானம் மேகங்களுக்கு வளைகாப்பு நடத்துகிற வானவில் காலத்திலே வைகறையின் புது
அரும்புகள்மொட்டு அவிழ்க்கும்பொங்கும் மங்கலம் இனிய சங்கமம் இதயத்தை இதமாக கட்டும்
வசந்த விடியல் வாழ்வின்வெற்றி தோரணங்களை புதிய விடியலுக்காய்கட்டி
முடிக்கட்டும் எட்டுத்திக்கும் தித்திக்கும் இல்லங்களை உள்ளங்களை செதுக்க வாசலில் வந்து வரவேற்போம்
- முனைவர் யாழ் எஸ். ராகவன், இராயப்பன்பட்டி, தேனி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.