வசந்த விடியல் - 4
நாள்தோறும் உதிக்கும் ஞாயிறு
உயிர்களின் வசந்த விடியல்
வறண்ட பூமியில் விழும் முதல் மழைத்துளி
நிலத்திற்கு வசந்த விடியல்
விளைச்சல் பெருகி நல்ல விலை கிடைத்தால்
விவசாயிக்கு வசந்த விடியல்
காதல் கொண்டவனேக் கணவனாக வந்தால்
பெண்ணிற்கு வசந்த விடியல்
அதேக் காதல் அறுபதுக்கும் மேல் தொடர்ந்தால்
அவர்களின் அன்புக்கு வசந்த விடியல்
திருமணம் முடிந்த மறு வருடமே குழந்தைப்பேறு
மணம் முடித்த பெண்ணிற்கு வசந்த விடியல்
பிறந்த குழந்தையின் அழுகை
தாய்க்கு வசந்த விடியல்
தந்தையின் கைபிடித்து நடக்கும் குழந்தை
வம்சத்தின் வசந்த விடியல்
பிறந்த குழந்தைகளெல்லாம் நாட்டுப்பற்றோடு இருந்தால்
நாட்டிற்கு வசந்த விடியல்
தன் பொறுப்புணர்ந்து கடமையாற்றும் மனிதர்கள்
இவ்வுலகிற்கு வசந்த விடியல்
- ம. இராமலட்சுமி, தர்மாபுரி, தேனி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.