வசந்த விடியல் - 9
அன்பை முன்னிறுத்தி, அகந்தை மறந்தால்
இல்லறத்தின் வசந்த விடியல்...
அறத்தைப் போற்றி, அறியாமையை மாற்றும்
சமூகம் நல்வாழ்வியலின் வசந்த விடியல்
நன்மையை நாடி, பகைமையை மறந்தால்
உலக அமைதிக்கு வசந்த விடியல்
உழவரை நாட்டின் தலைவருக்கு நிகராகப் போற்றலே
நல்லாட்சிக்கு வசந்த விடியல்
இயற்கையைப் போற்றும் பசுமை ஆர்வலரிருந்தால்
முளைக்கும் விதைக்கு வசந்த விடியல்
வறட்சி நீங்க வான்தரும் மழையைச் சேமித்தால்
நல்வளத்திற்கு வசந்த விடியல்
உழைக்கும் திறன் நிலைக்கும் நாளெல்லாம்
உழைப்பாளருக்கு வசந்த விடியல்
கண்ணியம் போற்றும் கடமையாளர்கள் நிறைந்திருந்தால்
ஊழலற்ற உலகிற்கு வசந்த விடியல்
திறமையைப் போற்றும் சமூகமிருந்தால்
நல்வளர்ச்சிக்கு வசந்த விடியல்
பெண்மையைப் போற்றிப் பெருமைப்படுத்தினால்
பெண்ணிற்கு வசந்த விடியல்
பொதுநலமிக்க அரசியல் வந்தால்
நல்ல மக்களாட்சிக்கு வசந்த விடியல்
- ம. குருதேவராஜ், தர்மாபுரி, தேனி மாவட்டம்
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.