கொரானாவை வெல்வோம்! - 15
கொரோனா யுத்தத்தால் மொத்த உலகமும் முடங்கிப் போக
ஒத்த நுண்ணுயிரின் மூன்றாம் உலகப் போர்
ஆயுதமெல்லாம் தெண்டம்; நிராயுதபாணியாய் அண்டம்!
விஞ்ஞானம் தேட முடியாமல் மெய்ஞானம் பூமியில்
பூமாதேவியின் ஆணைக்கு ஏதோ ஒரு சேனை
ஓசோன் கூரை தைத்து, காற்றுக்குள் நச்சு தீர்த்து
ஆற்றுக்குள் தீரா கழிவு நீர்த்து, சுத்தம் நிற்கிறது பூத்து
வல்லரசின் ஆணவம் மருந்துக்கு மண்டியிட... மரணத்திற்கு விடை தேட...
எம் பாட்டியின் உபதேசம் சுத்தம் ஆயுதம் ஆகியதே...
கைகுலுக்கி தழுவிடாமல் கைகூப்பி வணங்கி வரவேற்போம்...
வீதியெல்லாம் சுத்தி வந்தா சுத்தமா வீடு வர விதி
வீட்டுக்குள்தான் சாப்பாடு! கூப்பாடு! வீதியில் முகமூடிக் கட்டுப்பாடு
முடங்கி ஒதுங்கி பதுங்கிப் போக வேண்டியது நாம்தான்
நாமே ஆயுதம் ஆகாதவரை தன்னாலேயே அடங்கிப் போகும் கொரொனா
ஆம், அப்படியே நாம் கொரானாவை வெல்வோம்...!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.