கொரானாவை வெல்வோம்! - 2
மூச்சுவிடத் தவிக்குது உலகம்,
முன்னணி நாடுகளே கலக்கம்,
மோசமாய்த் தாக்குது அருவம்,
உலகமெலாம் கெடுதல் கிரகம்!
திணறுது மருத்துவமனைகள்,
தினமும் பலியாகும் உயிர்கள்,
சாலைகளில் தடுப்புச்சுவர்கள்,
காவலின் எச்சரிக்கை ஒலிகள்!
தகவல்கள் வருவதும் பலவிதம்,
தடுப்பூசி காண்பதில் மும்முரம்,
மருத்துவ அறிவியலின் உச்சம்,
மனித உயிர்களையே காக்கும்!
எல்லாரது மனதிலும் இறுக்கம்,
ஊரடங்கிக் கிடப்பதில் புழுக்கம்,
உள்ளடங்கி நாம் தங்கிடுவோம்,
கொரானாவை வென்றிடுவோம்!
- க. சோ. ராஜேந்திரன், உத்தங்குடி, மதுரை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.