கொரானாவை வெல்வோம்! - 4
மீண்டும் ஒரு சுதந்திரப் போர்.
வெள்ளையனை எதிர்த்து அல்ல.
கண்ணுக்குத் தெரியாத அரக்கணை எதிர்த்து.
உணவின்றி வறுமை என்னும் சிறை வைத்தான்...
சொந்த நாட்டில் அந்நியரானோம்
உறவுகளின் முகம்தெரியாமல் மறைத்துக் கொண்டோம்.
வேலை இழக்க வைத்தான்.
நடையாய் நடந்து சொந்த மண்ணைத் தேடவைத்தான்
பச்சிளம் குழந்தையைப் பாலின்றி சுமக்க வைத்தான்.
நீரின்றி உயிரையும் பறித்தான்
அரக்கனேப் பார்வையால் சுட்டெரிப்போம்
போர் அறநெறி தவறி மறைந்து உயிரை விழுங்குகிறாய்...
வீழமாட்டோம் வீரு கொண்டு எழுவோம்
நாளை விடியல் நமக்கானதே...
மீண்டும் ஒரு தீபாவளி...
புதுப் பண்டங்கள் படைத்து,
புத்தாடை அணிந்து
உறவுகளோடு மகிழ்வோம்.
அரக்கன் அழிந்தான் என்று.
அந்த விடியல் என் தேசத்திற்கானது...
- முனைவர் இரா. மாரிமுத்து, தேவகோட்டை.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.