கொரானாவை வெல்வோம்! - 5
ஒரு முறை பயன்படுத்தும் பொருட்களாக
உற்பத்தி செய்த சீனர்களிடமிருந்து
ஒன்றுமே செய்ய முடியாத தொற்றாக உருவாகி
உலகம் முழுவதும் பரவி நிற்கும் கொரோனாவே...
எந்த மருந்துக்கும் பயப்படாமல்
எதிர்வினையுடன் செயல்பட்டு
எத்தனையோ உயிர்களைப் பலி வாங்கும் கொரானாவே...
எப்படி உன்னை அழிப்பது? என்று
எல்லா நாட்டு மருத்துவ ஆய்வாளர்களையும்
விழி பிதுங்க வைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவே...
உலகம் முழுமையும் உன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து
உலகத்தையேச் செயல்பட விடாமல் தடுத்து
அனைவரையும் வீட்டுக்குள் கட்டிப்போட்ட கொரோனாவே
எந்தவொரு தோற்றமும் அழிவுக்குரியதே
அதில் உனக்கு மட்டும் என்ன விதிவிலக்கா?
எப்படியும் உன்னை அழிக்க
எவராவது மருந்து கண்டறிவார்...
அதுவரை உன் விருப்பப்படி
அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிரு...
எப்படியும் உன்னைக் கொல்வோம்...
உன் அச்சுறுத்தலை வெல்வோம்...!
- மு.சு. முத்துக்கமலம், தேனி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.