கொரானாவை வெல்வோம்! - 6
நேசிப்போம் போற்றிடுவோம் இயற்கை வளத்தை
உதிக்கும் முன் உதித்து நல்காற்றை சுவாசிப்போம்
மூச்சுக்காற்றைச் சமப்படுத்தி ஆயுளைக் கூட்டிடுவோம்
பச்சை உணவுண்டு பசியின்றி வாழ்ந்திடுவோம்
இடைவெளி நிர்ணயித்து இன்பமாய் இருந்திடுவோம்
சுயநலமாய் வாழாது பொதுநலத்தைப் பேணிடுவோம்
சமூக உணர்வோடு சரிநிகராய் அறமளிப்போம்
நாட்களை வீணாக்காது, நல்நூல்களைப் படித்திடுவோம்
சான்றோர் வாக்கைச் சாறுபோல் பருகிடுவோம்
முகக்கவசம் அணிந்து முழுவுலகைக் காத்திடுவோம்
தனிமையை விரும்பி தரணியைத் தாங்கிடுவோம்
பெரியோர் வாக்கை மாமருந்தாய்க் கேட்டிடுவோம்
காலம் அறிந்து கனிவாய்ப் பயணிப்போம்
விளையாட்டாய் இல்லாது விழித்திருப்போம்
அகிம்சை முறையில் அக்கிருமியை ஒழித்திடுவோம்
நோயற்ற உலகாக நம் உலகத்தை மாற்றிடுவோம்
- சிவ த பரமேசுவரன்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.