கொரானாவை வெல்வோம்! - 7
நுண்ணுயிரே! தலையில் கிரீடம் தரித்தக் கொல்லுயிரே!
மண்ணுயிருக்கு மூன்றாம் உலகப்போர் எப்படியிருக்கும்?
என்று நயமாய்க் காட்ட வந்தாயோ?
மனிதனின் ‘நான்’ எனும் ஆணவத்தை
அடக்க வந்த நவீன எமனோ?
கொல்லும் கொரோனாவே, உனக்கு
கோவிட் எனும் செல்லப்பெயர் வேறா?
பசி, உலகப் பொது எதிரி!
கொரோனா, உலகப் புது எதிரி!
வயிற்றுப் பசியோடு போராடிய எம்மை
வயிற்றில் பசியோடு போராட விட்டாயே!
நீ முடிசூடிய ‘முதலாளி’ - அதனால்தான்
உலகையே தனிமைச் சிறையில் அடைத்துவிட்டாயோ?
கொரோனா போட்ட கோட்டைத் தாண்ட முடியாமல்
தவிக்கும் ஏழைகளாய் சீதைக் கூட்டம்
மருந்து சூடாமணி கண்டு
விரைந்து நீங்கும் இந்த வாட்டம்
ஒன்றுபடுவோம்... இல்லையில்லை
ஒதுங்கியிருப்போம்...
தனித்திருப்போம்... விழித்திருப்போம்...
கொரோனாவை வென்றிடுவோம்...
- சீ. மோகன்ராஜ், வெங்கிக்கால், திருவண்ணாமலை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.