மார்கழிக் கோலங்கள் - 2
வான் மேகம் சிந்தும் மழைத்துளிகளின் கோலம்
அசைந்திடும் மரங்கள் உதிர்த்திடும் பூக்களின் கோலம்
கடல் அலை கரையில் எழுதிடும் மணல் கோலம்
பட்டாம்பூச்சிகளின் இறகுகளில் நிறங்களின் கோலம்
மழலைப் பிஞ்சு விரல்களில் கிறுக்கிடும் கோலம்
வானில் சிறகடித்துப் பறக்கும் பறவைகள் கோலம்
உழவனின் கலப்பை மண்ணில் வரைந்திடும் கோலம்
பகற்பொழுதில் கதிரவன் தீட்டிடும் நிழல் கோலம்
பாலைவனத்தில் வரைந்திடும் காற்றின் கோலம்
நீரில் வட்டமிடும் மீன்களின் கோலம்
பூவையரின் எண்ணங்களை ஒன்றாக்கிட, நன்றாக்கிட
கிராமத்து மண்வாசம் தெருவெல்லாம் நிறைந்திட
எத்தனை வண்ண வண்ணக் கோலங்கள்
மார்கழித் திங்களில்...மனம் மகிழச் செய்யும்
மார்கழிக் கோலங்களாய்...!
- இரா. இராம்குமார், இராயப்பன்பட்டி, தேனி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.