மார்கழிக் கோலங்கள் - 20

மாதங்களில் சிறந்தது மார்கழி என்று சொல்ல
மல்லிகை நகரமாம் மதுரையில் இருந்து வந்திருக்கிறேன்
வைகறையில் துயில் எழுந்து வாசலில் கோலமிட்டு
பாடிடவே தமிழ் கொண்டு பாசுரங்கள் மணக்கவே
வாயிலிருந்து உச்சரிக்கும் மக்களோடு வாசலிலே கோலங்களில் பூக்கள்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் ஆண்டாள் சொன்னது அன்று
கடவுளோடு பொருத்திச் சொன்னது மெய்ஞானம்
அறிவோடு இணைத்துச் சொல்லுகிறது விஞ்ஞானம் இப்படி
உயிருக்கு வேண்டிய ஜீவ அணுக்கள்
அதிகாலை காற்றிலே மார்கழி மாதத்தில் நிறைந்து கிடக்கிறது
பாவை நோன்பு இருந்த ஆண்டாளின் தேவை
அறிந்து வந்தார் இறைவன் மார்கழி மாதத்தில்
எல்லா ஆலயங்களிலும் இறைவனின் திருப்பள்ளிஎழுச்சி
மற்ற மாதங்களைவிட மார்கழியில் வெகு சீக்கிரமாகவே நடக்கும்
தட்டிலே பூவோடு வைத்திருந்தால் அது திருமண அழைப்பு நமக்குத் தெரியும்
மார்கழி கோலங்கள் மறைந்திருக்கிறது பல கதைகள்
பாசுரங்களை பாடுபவர்கள் தங்கள் காதுகளிலும் பூ வைத்திருப்பார்கள்
தலையில் பூ வைத்து இருப்பார்கள் சரி தரையில் பூ வைத்திருப்பார்கள்
அதுவும் சரி இந்த மார்கழி மாதத்தில் தான்
தலையில் பூ வைத்திருப்பார்கள் தமிழ் பெண்கள்
தரையிலேயே பூ வைத்திருக்கும் மார்கழித்திங்கள்
விடத்தை உண்டு உலக மக்களை ஈசன் காத்ததும்
இந்த மார்கழி மாதத்தில்
திருப்பாற்கடலை கடைந்த போது முதலில் வந்த
பானு முழுக்க தேமதுரத் தமிழ் பாசுரங்கள்
ஆழ்வார்கள் தந்த அற்புத மாதம் மார்கழி மாதம்
இறைவனை வணங்கும் இனிய மாதம்
மனிதம் வளர்க்கும் புனித மாதம் மார்கழியை போற்றும்
- கவிஞர் சு. பாலகிருஷ்ணன், மதுரை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.