மார்கழிக் கோலங்கள் - 23
மாயவனின் மனங்கவர்ந்த
மார்கழித் திங்களில்
பச்சரிசி மஞ்சளையும்
பதமாக மாவாக்கி
பசுஞ்சாணம் தெளித்த
பரந்த முற்றத்தில்
பனிபொழியும் காலை வேளையிலே
பாவையவள் பறைசாற்றுவாள்
தன் எண்ணக் கோலத்தை
வண்ணக் கோலங்களால்
பாவையவள் மேனிக் கோலத்தையும்
பச்சரிசியின் வண்ணக் கோலத்தையும்
பார்க்கப் பார்க்கப் பரவசந்தரும்
கோலத்தைக் கொஞ்சிடும் பாவனையில்
வந்த எறும்புகளும் எளிதாக
வாசலிலேப் பசியாறி மனங்குளிருமே!
அழகோடு மட்டுமின்றி
அறஎண்ணத்தோடும் பளிச்சிடும்
பாரதப் பண்பாட்டுக் கோலங்களே!
மகிழ்ச்சியின் வெளிப்பாடு
மார்கழிக் கோலங்களே
மட்டில்லா மகிழ்ச்சியோடு
மாயவனின் அருளோடு
உன்னை வரவேற்கிறேன்.
- எம். முத்துதெய்வநாயகி, வள்ளியூர், திருநெல்வேலி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.