மார்கழிக் கோலங்கள் - 26

சின்ன சின்ன புள்ளிகளில், வளைவுகளையும்
நெழிவு,சுழிவுகளையும் கொண்டு வண்ணமயமானது என
வாழ்க்கைக்கு வகுப்பெடுக்கிறது- “மார்கழிக்கோலங்கள்”
அரைமணி நேர -‘பொறுமைக்கு” கிடைத்த பரிசு
அழகான கோலம்,அவசரப்பட்டால் அது அலங்கோலம்
பொறுமையை நமக்குள் புகுத்த வேண்டும் என புரிய வைக்கிறது
மார்கழிக்கோலங்கள்
சிந்தனை சிதறல்களை சிறை வைத்துவிட்டு
எண்னங்களை ஒருமுகப்படுத்தினால் உருவாகும் கோலம்-இது
யோகக்கலையின் ஒரு பகுதியே-“மார்கழிக்கோலங்கள்”
நாம் குனிந்து நிமிர்ந்து
கைகளை மடக்கி, நீட்டி- விரல்களை நெழித்து சுழித்து
கால்களை கூட்டி,விரித்து-சுறுசுறுப்பை சேர்த்து-கூட்டி
ஆரோக்கியம் கூட்டி, காக்கும் மவுனமான
உடல்கல்வி ஆசிரியர் –:”மார்கழிக்கோலங்கள்”
எறும்புகளுக்கு அன்னதானக்கூடம்
அரிசிமாவில் அலங்கரிக்கும் :”மார்கழிக்கோலங்கள்”
அதிகாலை எழவேண்டும் எனும் திட்டமிடலுக்கான
துவக்கப்புள்ளியை நமக்குள் வைக்கிறது- “மார்கழிக்கோலங்கள்”
படைப்பாற்றலை வெளிப்படுத்த கைகளில்
கை கொடுக்கும் கலைத்தோழி” “மார்கழிக்கோலங்கள்”
நிரந்தரமாய் கோலங்கள் வரையப்பட்ட ஓடுகள்
வாசலில் குடியேற,- வருத்தப்படும்- “மார்கழிக்கோலங்கள்”
அடுக்குமாடி வீட்டுவாசல்களை அலங்கரிக்க
இடமில்லாமல் இடர்படும் –“மார்கழிக்கோலங்கள்”
- வே. ரவிச்சந்திரன், ஓலப்பாளையம், திருப்பூர் மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.