மார்கழிக் கோலங்கள் - 27
அதிகாலை அற்புத மணத்துடன்
குளித்து நீரொழுக - பெண்ணவள்
மண்ணில் விரித்திடும் தேரும்
பூக்களும் இராஜராஜனையேப் போட்டிக்கு
வாவென்று வரிந்து அழைக்கும்
சுத்தக்காற்று சுவாசப்பையை நிறைக்க
சுந்தர மொழிகளில் இறைவனின்
மந்திரங்கள் ஒலிக்க ஆத்தங்கரை
பிள்ளையாருக்கு அடிக்கடி குடமுழுக்கு…
குளிரில் சுகவீனம் ஏற்படாமலிருக்க
ஆரத்தியோடு அறுசுவை உணவுப் படையல்
என்று தொடங்கினாலும்,
பிரசாதங்களே உணவாய் ஏழைக்கும்
வயிறு நிரப்பிடும் …
சுவாமிகளின் இன்னிசையும் இன்சொல்லும்
மனதில் நிறுத்தும்…
பூசணிப் பூக்களோடு பூவையரின்
முகமும் பூக்கும்…
கைகளெங்கும் மருதாணி பூசி
மணம்வீச மஞ்சளும் பூணும்…
மங்களமும் மணவாளனும் மானுடமும்
எதனைச் சொல்ல…
மொத்தத்தில் ஞானமும் குளிர்ச்சியும்
வர்ணங்களால் நிறைக்கும் வானவில்…
- முனைவர் பி. வித்யா, மதுரை.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.