மார்கழிக் கோலங்கள் - 4
தேவர்கள் அணிவகுக்கும் மார்கழி மாதத்தில்
வைகறை உதிக்க நாணிக் காத்திருக்க
எங்கும் பனிசூழ்ந்த காலை வேளையில்
எழுவகைப் பெண்களிடும் மார்கழிக் கோலங்கள்
பேதை பெதுமையிடும் பூக்கோலங்கள்
வண்ணங்கள் நிறைந்த பருவ மகளிர்
மங்கை மடந்தையிடும் வர்ணக்கோலங்கள்
திருமணக் கனவைச் சுமந்து ஆண்டாளின்
திருப்பாவையைப் பாடிக் காத்திருக்கும்
அரிவை தெரிவையிடும் மயில் கோலங்கள்
திருமணம் மகப்பேறு அடைந்த பேரிளம்பெண்
பத்தினிப் பெண்கள் குலம் தழைக்க
பச்சரிசி மாவுக் கொண்டு இடும் மாக்கோலங்கள்
எழுநிலைப் பெண்டிரும் தத்தம் கனவுகளை
கோலத்தின் நடுவேப் பிடித்த பிள்ளையாரிடமும்
முடிவில் பூசனிப்பூ வைத்துத் தேவர்களை வணங்கி
வாயிலில் வரவேற்று நிற்கும் மார்கழிக் கோலங்கள்
- ம. இராமலட்சுமி, தர்மாபுரி, தேனி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.