மார்கழிக் கோலங்கள் - 6
பரவிட்ட ஒளியில்
விழுந்திட்ட பனியில்
பிரதித்திட்ட பிம்பம் - மங்கை
வரைந்திட்ட கோலம்.
நீண்டிட்ட வரிசையில்
ஊறிட்ட எறும்பு
உண்டிட்ட மாவு- மனம்
நிறைத்திட்ட நினைவு.
போற்றிட்ட பழசை
மறந்திட்ட மனசு
ஏற்றிட்ட நிகழ்வு-மார்கழி
தாங்கிட்ட கோலம்.
வரைந்திட்ட கோலம்
வெளியிட்ட(து) அழகு
தொகையிட்ட(து) நிகழ்வு-மங்கை
கொண்டிட்ட பொறுமை.
பிரித்திட்ட கிளவி
குழைத்திட்ட பொருளாய்
மறந்திட்ட மார்கழி - கோலம்
இழந்திட்ட(து) மகிழ்ச்சி.
வரைந்திட்ட வளைவில்
குவிந்திட்ட நிறத்தில்
நிலைத்திட்ட குடிலினி - ஆதி
நிறைந்திட்ட கோவில்.
குறிப்பு :
* கிளவி = இரட்டைக்கிளவி
* தொகையிட்ட(து) = தொகைச்சொல்
- பா. ஏகரசி தினேஷ், திருச்சி

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.