முதுமையைப் போற்றுவோம்...! - 1
இயற்கை இயைந்த இரவல் வாழ்வில்
ஒளிர்ந்து தேய்ந்த இளமையின் இறப்பில்
இயல்பாய் பிறப்பதே முதுமை.
வாழ்க்கை வாக்கியத்தை விவரிக்கும் தொடரின்
தொய் வில்லாது தொடரும் வரிகளின்
வழுவான முடிவே முதுமை.
சுருங்கிய சுற்றம் சுட்டுமியல்பு வஞ்சதீயே
விரிந்த உலகின் சுருங்கிய பிரதியே
சுருக்கதேகம் சுட்டும் முதுமை.
வளர்ந்து விரிந்த வரம்புகடந்த வஞ்சம்
உண்மை நிலையறிந்த இங்கே தஞ்சம்
வேறெது வெருமைபடர்ந்த முதுமை.
வென்றிடக் காலன் காண துடிப்பதுஉம்
நிலைத்திடப் பெற்ற பிள்ளைகள் வெறுப்பதுஉம்
கிடந்து வருந்தலாமோ முதுமை.
கருவைக் காக்கும் கருணைத் தாயென
நீரைக் காக்கும் நில வேந்தென
காக்க வேண்டியதிந்த முதுமை.
துளிர்ந்து தளைத்த திமிரில் வசதியாய்
மறந்திடலாம் நாளைய நிகழ்வை அடைவாய்
தளர்ந் தொரு முதுமை.
அறிந்து அனைத்திடு அன்போடு இன்றே
விரும்பி இணைத்திடு உன்னோடு நன்றே
சிரித்து வாழட்டும் முதுமை.
- பா. ஏகரசி தினேஷ், திருச்சி.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.