முதுமையைப் போற்றுவோம்...! - 10
தளிர்நடை ஏந்தித் தள்ளாடும் பருவத்தே
துணையின்றி நிற்கின்றேனே!
என்ன வரும் எனை நீங்கி பரலோகம்
சென்ற வேலையிலே பாவியாய் நானும் ஏனோ!
காலன் என்னை நெருங்குகின்றான்!
அடடா அவனுக்குத்தான் என் மீது அன்பு போலும் ஏங்குகிறது என் மனம்!
பாலூட்டி வளர்த்த மகன்கள்
காலம் முடியும் வேலையிலும் பாலூற்ற வரவில்லை ஏனோ!
உயிர் பிரியும் வேலையில் உரியவர் இல்லாவிடினும்
எனக்காக இந்த இல்லத்தில் நான்கு முதியவர்கள் பிரார்த்தனையோடு!
செல்கின்றேன் ஆழ்ந்த நித்திரைக்கு
அவமானமற்ற உலகிற்கு
பந்த பாசமில்லா பரலோகத்திற்கு!
அன்று நான் செய்த பாவம்தான் இன்று
எனக்கிந்த நிலை என எண்ணியது ஆன்மா!
அவள் அன்று மகனை பிரித்து ஓர் தாய்க்குச் செய்த பாவத்தின் நஷ்ட ஈடிது!
நாமும் ஓர் நாள் முதுமையடைவோம் என்றெண்ணி முதுமையைப் போற்றுவோம்!
அவர்களுக்கு ஊன்று கோலாகிடுவோம்!
- காயத்ரி ராஜ்குமார், மதுரை..

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.