முதுமையைப் போற்றுவோம்...! - 11
இளமை எனும் ஓவியம் வரையும் ஓவியன் முதுமை
விஞ்ஞானம் முந்திய மெய்ஞானத்தைக் கண்டது முதுமை
நாம் செய்யும் தவறுகளைத் திருத்தும் அனுபவம் முதுமை
அந்த முதுமையே வாழ்வியலுக்கும் அழகு!
முன் மலர்ந்த முதுமை இல்லையெனில்
பின் மலரும் புதுமை நாம் இல்லை
அந்த முதுமையினை மறவாமல் போற்றுவோம்!
மாண்டரீன் எனும் சீன மொழியே வியந்து
பார்க்கும் தமிழ் எனும் செம்மொழி
அந்த முதுமையினை நாளும் போற்றுவோம்!
புத்தியைக் கையாண்ட இளமைக்கு வாழ்நாள் அண்மையிலும்
உடற்கூறு யுக்திகளையும் கையாண்ட முதுமைக்கு
முதுமக்கள் தாழியிலும் வாழ்நாள் சேய்மையிலும்
அந்த முதிர்ந்திடா முதுமையினைப் போற்றுவோம்!
இணையத்தில் தொலையும் இளமைக்கும்
ஈடு இணையில்லாமல் வாழ்ந்த
முதுமையினைப் போற்றுவோம்!
முந்தைய நம் மரபுவழி மருத்துவத்தில்
நோய்களுக்கு காலாவதி மனிதனுக்கு அல்ல
அதைத் தந்த முதுமையைப் போற்றுவோம்!
முதுமை எனும் சூரியன் அளித்த
புனிதமிகு புவியில் தான் நம் வாழ்வு எனில்
அந்த முதுமையைப் போற்றுவோம்!
- எ. கௌரி, கூடலூர், தேனி மாவட்டம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.