முதுமையைப் போற்றுவோம்...! - 17
கிழவன் என்னும் புதுப்பட்டம்
எக்கோன் அளித்தான் உமக்கு
இளமை தவழ்ந்து கடந்தாய்
இருப்பினும் இப்பெயர் எதற்கு?
நோய் வாயிலும்
வாய் மருத்துவம்
எக்குருகுலம் சென்றீர்?
தோல் சுருங்கி
நரைமுடி இருக்கையில்
இணைபிரியா காதல்
எக்காவியம் படைப்பதற்கு?
சின்னஞ்சிறு கதை சொல்லி
தினமும் மடி உறக்கம்
இந்தக் கதை களஞ்சியத்தில்
எங்கிருந்துதான் வருகிறதோ...?
வேண்டிய போது
விரும்பித் தருகிறாய்
இந்த சுருக்குப்பை
எந்த வங்கிக் கணக்கு?
மூணாம் காலில் நடைபயணம்
கொஞ்சும் புதுக்குழந்தை
வானம்பாடி பாடிடலாம்
என்றும் முதுமையின் பெருமை
- ரா. சுதர்ஷன், உசிலம்பட்டி, மதுரை மாவட்டம்..
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.