முதுமையைப் போற்றுவோம்...! - 19
உயிரற்ற உடல்களுக்கிடையே வாழ்கின்ற
உடலற்ற உயிர்கள் இவர்கள்
உயிராகப் பிறந்தவர்களுக்காய்
உயிர்வாழும் உறவுகள் முதியவர்கள்
உன்னை இந்த உலகத்திற்கு
உருவமைத்த உருவங்கள்
உண்பதற்கு உணவு இன்றி
உரல் இடித்து வாழ்ந்தவர்கள்
உறக்கமின்றி அலைவதேன்
உலகத்தின் நியதியா? இல்லை
உண்மையான வாழ்விதுவா?
வரலாறு கண்ட வாழ்கின்ற புத்தகங்கள்
வந்தோரை எல்லாம் வாழவைக்கும் உறைவிடங்கள்
வயதைக் கூட்டுகின்ற வருடங்கள் பல வாழ்ந்து
“வனப்பு(பூ )”என்பதன் வரைவிலக்கணம் புரிந்தவர்கள்
வானிலை அறிக்கையான வாழ்க்கைப் பயணத்தில்
முதுமை என்பதை முன்கூட்டியேத் தெரிந்தவர்கள்
முகம் சுருங்கினாலும் முகம் சுளிக்காத முன்னோடிகள்...
பேருந்தில் இடம் ஒதுக்கு பெருஞ்சாலையில் விலகிவிடு
பேரன்போடு பேசவிடு பேரர்களைப் பழகவிடு
கழிப்பதற்கு முதலிடமதை சலிக்காமல் கொடுத்துவிடு
களிப்புடனே வாழ்ந்திடவே காவிருக்கை அமைத்துக்கொடு
இறுதிப் பகுதியது இனிதே நிறைவேற
இங்கிமாய் உதவுவோம் இறுமாப்புடன் வாழ வைப்போம்.
- தர்சினி கிருபாகரன், ஐக்கிய ராஜ்ஜியம் (UK).

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.