முதுமையைப் போற்றுவோம்...! - 24
தவிக்க வைப்பதேன் தரணியின் சொந்தங்களே...
தவிப்பது யார்...
முன்னுரை எழுதியவனும் முன்னூறு நாள் சுமந்தவளும்தானே...
உன்னைச் சுமந்து உண்ணா நோன்பிருந்து உன்னைக் காத்தவள்
உன் உயிர் சுமந்தவளை உயிராய்க் காத்தவன்...
வலியின் உச்சம் கண்டு உனை ஈன்றவள்...
உனை ஈன்றவளை மீண்டும் உயிர்ப்பித்தவன்...
ஊனை உருக்கி உதிரத்தைப் பாலாக்கி உனக்கு ஊட்டியவள்...
ஊட்டியவளுக்கு உற்ற துணையாயிருந்தவன்...
தவழ்ந்து தளிர் நடை கண்டு தன்னை உணரும் வரை
உன்னைத் தாலாட்டித் தூங்க வைத்தவள்...
உன்னையும் அவனையும் காத்து அரவணைத்து
அமுதூட்டி மகிழ்ந்தவளையும் உழைத்து உயிர் காத்தவன்...
இருவரின் வாழ்வுமே என் வாழ்வு என்றானவளையும்
காத்து அதன் பாடு உங்கள் இருவருக்காய்
உழைத்து உழைத்து உயிர் சுமப்பவன் அவன்...
பெற்ற பிள்ளைகளேப் பெரிதென்று வாழ்பவர்கள்...
வாழ்ந்தவவர்கள்...
முதுமை எல்லோருக்கும் வரும்...
இன்று அவர்கட்கு... நாளை நமக்கும் அதே தானே...
நன்றி மறவோம்... புரிந்தே வாழ்வோம்...
முதுமையைப் போற்றுவோம்...
முன்னுதாரணமாயிருப்போம்...
- கவிஞர் பரணி ரமணி, மதுரை.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.