முதுமையைப் போற்றுவோம்...! - 26
மானிடர் வாழ்வின் மகத்துவம் முதுமை
வானுயர் புகழ்தரும் மந்திரம் முதுமை
பேரிடர் காத்து அணைப்பது முதுமை
வேறிடர் உரைத்துத் தடுப்பது முதுமை
சிறுமை விலக்கி வலிமை காட்டும்
வறுமை ஒதுக்கி வளமை கூட்டும்
முதுமை என்பது முத்திரை அல்ல
வலிமை வலியை ஊட்டுவதல்ல
முதுமை என்பது பிணியும் அல்ல
முன்னோர் ஆசிகள் முழுதாய் காட்டும்
இம்மை செயல்களை நலம்பெறச் செய்யும்
உண்மை வேதம் தமதெனச் சொல்லும்
வார்த்தை முதுமை காட்டிடு மனிதா!
வருவது எல்லாம் வெற்றிகள் ஆகும்!
செய்கையில் முதுமை காட்டிடு நீயே!
தருவதும் புகழை சுவர்க்கம் ஆகும்
நாளைய உலகில் நாமும் முதியவர்
வேளையும் பொழுதும் வலிமிகும் குழந்தையே
ஏழையும் வேந்தரும் யார் இருந்தாலும்
முதுமை கடந்து இறப்பது எளிதா
முதுமை போற்றி முழுமை காப்போம்
இனிமை வாழ்வினை நலமாய் வாழ்வோம்
கருமை குணங்களை காற்றினில் விரட்டி
வலிமை பெருமை மழையெனப் பெறுவோம்!
- அ. பாண்டுரங்கன், மதுரை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.