முதுமையைப் போற்றுவோம்...! - 30
அல்லல் மிகமிகப் பெற்றவர்கள்
அனுபவ அறிவை கற்றவர்கள்
இல்லத்தில் இருக்கும் முதியவர்கள்
ஈடோ இனையோ அற்றவர்கள்
பலவித நபர்களை பார்த்தவர்கள்
பாடங்கள் அவர்களால் சேர்த்தவர்கள்
நிழலென பிள்ளைகள் நலனிலே
நித்தமும் தன்னை வார்த்தவர்கள்
நல்லது கெட்டது தெரிந்தவர்கள்
நமக்கு நன்மை புரிந்தவர்கள்
இல்லத்தை நன்றாய் நடத்திடவே
எளிய வழிகளை அறிந்தவர்கள்
மூத்தோர் யோசனை கேட்டுவைப்போம்
முறையாய் வழ்வினில் போட்டுவைப்போம்
எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும்
எதிர்கொண்டு அதற்கு வேட்டுவைப்போம்
வேர்களை மறக்கும் விழுதுகளாய்
விளங்கும் நிலமை மாறிடனும்
பேர்சொல்லும் பிள்ளை நானென்று
பேச்சும் வருமெனக் கூறிடனும்
நோய்நொடி வந்தே துன்புருத்தும்
நொந்து நொந்ததே மனம்வருந்தும்
தாயுள்ளம் கொண்டு கவனித்தால்
தனிந்தே தீரும் மனவருத்தம்
- வே. ரவிசந்திரன், ஓலப்பாளையம், திருப்பூர் மாவட்டம்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.