முதுமையைப் போற்றுவோம்...! - 32
முதுமையை இளமையில்
போற்றுவோம்.
முதுமையை இல்லத்தில்
போற்றுவோம்.
இல்லங்களே இல்லாத
இன்றைய சூழலில்
முதியோர் இல்லங்களில் மட்டுமே
முதுமை போற்றுவது
வெட்கக்கேடு
முதுமை இல்லங்களில்
போற்றப்பட்டால்
கொடு இன்பம் தரும்
குடும்பம் உருப்பெற்றிருக்கும்
முதுமை இல்லங்களில்
போற்றப்பட்டால்
குடும்பம் சேர்ந்த ஊரே
உருமாறியிருக்கும்.
முதுமை இல்லங்களில்
போற்றப்பட்டால்
ஊர் சேர்ந்த நாடே
நன்றாகும்.
முதுமை இல்லங்களில்
போற்றப்பட்டால்
நாடோடு இணைந்த
உலகம் அமைதியுறும்.
அட..! உலக அமைதி பெற
முதுமையை போற்றுவோம்.
- ஆர். ராகேஷ், கூடுவாஞ்சேரி, சென்னை - 603202

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.