முதுமையைப் போற்றுவோம்...! - 4
* வயது முதிர்வால்
வயதுக்கு வந்து
வஞ்சிக்கப்பட்ட
வசங்கெட்ட பருவமல்ல முதுமை....
அனுபவத்தால்
ஆண்டு பல கடந்து
புத்திமதி சொல்லும்
புனிதப்பருவம் அது...!
* தட்டினிலே வைத்து
கட்டிலிலே கிடத்தி
காலத்தை கழிக்கும் உபாயம் உட்பட
கொடும் பருவமல்ல அது...
மீண்டும் ஒரு பூவாய்
முத்தமிடச் சொல்லி
கொழஞ்சு பேசும்
குழந்தை பருவம் அது...!
ஆசை கொள்ளது
அரவணைத்துக் கொண்டு
வாழ வழிவகை சொல்லும்
காலக்கண்ணாடியே முதுமை...!
* ஜனகனமன என நினைத்து
மனதில் தேசியக் கொடியாய் ஏற்றுவோம்
உள்ளத்தில் கனிவு கொண்டு
இல்லத்தில் முதுமையைப் போற்றுவோம்...!
- வீ. அக்கினி வீரா, சருத்துப்பட்டி, தேனி மாவட்டம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.